Saturday, August 13, 2011

சந்தனக் காட்டு வீரப்பன் வாழ்க்கை படமாக்கும் வேலை தொடங்கியது

சந்தனக் காட்டு வீரப்பன் வாழ்க்கையை படமாக்கும் வேலையை தொடங்கிவிட்டார் குப்பி புகழ் ஏஎம்ஆர் ரமேஷ்

காட்டையும் நாட்டையும் கலக்கி வந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு படமாக்கும் ஏஎம்ஆர் ரமேஷ் அதற்கான படப்பிடிப்பையே ஆரம்பித்துவிட்டார்.


படத்துக்கு வன யுத்தம் என பெயர் வைத்துள்ளனர். வீரப்பன் வேடத்தில் நடிப்பவர் கிஷோர். பொல்லாதவன் உள்ளிட்ட எக்கச்சக்க படங்களில் ஹீரோக்களை முந்திக் கொண்டு நல்ல பெயரை தட்டிச் சென்றவர்.

அதிரடிப் படை தலைவர் விஜயகுமார் வேடத்தில் அர்ஜூனும், எஸ்பி செந்தாமரைக் கண்ணன் வேடத்தில் ரவி காலேவும் நடிக்கிறார்கள். கன்னட நடிகர் ராஜ்குமார், அவர் மனைவி பர்வதம்மா பாத்திரங்களில் முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

வீரப்பனின் கோபி நத்தம், ஒகேனக்கல் பகுதிகளில்தான் முழுப் படமும் எடுக்கப்படும்," என்றார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

No comments: