Saturday, August 13, 2011

5 ஆண்டுகளில் காவல்நிலையங்கள் சொந்த கட்டடத்தில் இயங்கும்

அதிமுகவின் 5 ஆண்டு கால ஆட்சிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களும் சொந்த கட்டடங்களில் இயங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:

தமிழகத்தில் 1258 சட்டம், ஒழுங்கு காவல்நிலையங்கள், 196 மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் 38 இருப்புப்பாதை காவல்நிலையங்கள் உள்பட மொத்தம் 1492 காவல்நிலையங்கள் உள்ளன.

தற்போது வாடகை கட்டடங்களில் இயங்கிவரும் 282 காவல்நிலையங்களில் 92 காவல்நிலையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த 5 ஆண்டுகால ஆட்சிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களும் சொந்தக் கட்டடங்களிலேயே இயங்கும் என முதல்வர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

No comments: