Monday, May 05, 2008

உடற்பயிற்சிக்கு சில வழிகள்

எந்த வேலையும் உடற்பயிற்சி தான்!

"டாக்டர் சொல்லி விட்டார்; நான் எக்சர்சைஸ் பண்ணப்போறேன்' என்று, வாக்கிங் உடைகள், தொப்பி, பூட்ஸ் எல்லாம் வாங்குவர். அதிகாலையில் நடந்து விட்டு, கடைசியில் நொறுக்குத்தீனி, ஜூஸ் என்று எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு வீடு திரும்புவர். இதனால் ஒரு பயனும் இல்லை; அவர்கள் எதிர்பார்க்கும் கலோரி குறையாது. ரத்த அழுத்தமும் குறையாது. நடப்பதில் குறையும் கலோரி, யோகா செய்வதிலும் குறையும்; வீட்டு வேலைகளை செய்வதிலும் குறையும். ஆபீஸ் வேலை செய்யும் போதே உடற்பயிற்சி செய்யலாம். வீடு,ஆபீசில், வெளியிடங்களில், எப்படி உடற்பயிற்சி செய்து கலோரியை குறைக்கலாம்?

இதோ சில வழிகள்:

* ஆபீசில் இருந்து பஸ்சில் திரும்பி வரும் போது, ஒரு ஸ்டாப் முன்னதாகவே இறங்கி வீட்டுக்கு நடந்து போங்கள்.

* அடுத்த தெருவுக்கு போவதற்கு கூட பைக்கை எடுக்காதீர்கள்; நடந்து போகலாமே.

* மாடிப்படி ஏறுவதற்கு லிப்டை பயன்படுத்தாதீர்கள்.

* மதிய உணவு சாப்பிட்டபின் சக ஊழியர்களுடன் நடந்து செல்லுங்கள்.

* தளர்ந்த உடைகளை பயன்படுத்துங்கள்; காற்று வாங்க வசதியாக இருக்கும்.

* பைலை ஆபீஸ் பையனிடம் தருவதற்கு பதில் நீங்களே கொண்டு போங்கள்.

* அரை மணிக்கு ஒரு முறை கம்ப்யூட்டரில் இருந்து கண்களை எடுத்து விட்டு சற்று எழுந்து நிற்கலாம்; நடக்கலாம்.

* கண்களை ஒரு நிமிடம் மூடி, யோகா பயிற்சியில் செய்வது போல மேல்கீழாக, வலது இடமாக, சுழற்றவும். தோள்களை, காதில் இடிக்கும் படி உயர்த்தி தளர்த்தவும்.

* இருக்கையில் இறுக்கமாக உட்காராமல் சாதாரணமாக உட்கார்ந்து வேலை செய்யுங்கள்.

* இருக்கையில் உட்கார்ந்த நிலையில், வலதுகையை நீட்டுங்கள்; இடது கையை நீட்டி, வலது உள்ளங்கையுடன் சேருங்கள்; நீட்டி பின், மணிக்கட்டை மேலும் கீழுமாக அசையுங்கள். கடிகார முள் போல சுழற்றவும்; "ஆன்டி கிளாக்' காகவும் சுழற்றவும்.

* கம்ப்யூட்டரில் வேலை பார்த்தால், மணிக்கு ஒரு முறை எழுந்து நில்லுங்கள்; ஒரு நிமிடம், அமைதியாக மூச்சு பயிற்சி செய்யுங்கள்.

* ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடியுங்கள்; அதிக காபி, டீயை தவிருங்கள்.

* தலைவலி வந்தால், உடனே சில நிமிடம் வெளியில் காலாற நடந்து சென்று வாருங்கள்.

* அடிக்கடி மாத்திரை போடுவதை தவிருங்கள்; அமைதியாக வேலை செய்ய பழகுங்கள்.

* வேலையில் டென்ஷன், பதட்டம் கூடவே கூடாது. மனதில் வேலை செய்யும் எண்ணம் மட்டும் இருக்க வேண்டும்.

3 comments:

Anonymous said...

very helpul to read

Anonymous said...

Golden Words...

Anonymous said...

computer article in tamil Read more