Thursday, May 08, 2008

அக்னி -3 ஏவுகணை சோதனை வெற்றி


சர்வதேச அரங்கில் இந்தியாவின் ராணுவ வல்லமையை வெளிப் படுத்தும் வகையில், அக்னி -3 ஏவுகணை சோ தனை, நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மூன்றாயிரத்து 500 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கையும் தாக்கவல்ல இந்த ஏவுகணை; அணுகுண்டை சுமந்து செல்லும் திறன் படைத்தது. அணுசக்தியில் இயங்கும் சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல் தளத்தால், ஏற் பட்ட அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அக்னி -3 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில், ஏவுகணை உற்பத்தியில், இந் தியா பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. அந்த வகையில், அக்னி -3 ஏவுகணை தயாரிப்பு முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்த ஏவுகணை, தரையில் இருந்து செலுத்தப்பட்டு, தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்க வல்லது. 16 மீட்டர் நீளமும், 1.8 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த ஏவுகணையின் மொத்த எடை 48 டன்.

அதிகபட்சம் 1.5 டன் எடை கொண்ட குண்டை சுமந்து செல்லும். இந்த ஏவுகணையில் நவீன கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அது ஏவுகணை செல்ல வேண்டிய வழித்தடத்தை கண்காணிக்கும் திறன் படைத்தது. இந்த ஏவுகணை இரண்டு அடுக்கு கொண்டது. உள் நாட்டு தொழில்நுட் பத்தில் உருவாக்கப் பட்டது. திட எரிபொருளில் இயங்க கூடியது. எனவே, இதை இந்தியாவின் எப்பகுதிக்கும் கொண்டு சென்று இயக்க முடியும். அக்னி -3 ஏவுகணை சோதனை, முதலில், 2006 ஜூலையில் நடந்து; அது தோல்வியில் முடிந்தது. அப் போது, ஏவுகணை செலுத்திய 65 வினாடிகளில், அது தன் கட்டுப்பாட்டை இழந்தது. இதன் பின், 2007 ஏப்ரல் 12ம் தேதி, அக்னி -3 ஏவுகணை சோதனை மீண்டும் நடத்தப் பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. ஏவுகணை செலுத்தப்பட்டு, இலக்கை தாக்கும் வரை 15 நிமிடங்களுக்கு, அதன் கட்டுப்பாடு விஞ்ஞானிகளிடம் இருந்தது. சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்றாவது முறையாக, அக்னி -3 ஏவுகணை சோதனை நேற்று மீண் டும் நடத்தப்பட்டது. ஒரிசா கடற்கரையில், பாலாசூரை ஒட்டியுள்ள வீலர் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. காலை 9.56 மணிக்கு, நடமாடும் லாஞ்சரில் இருந்து ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. ஆரஞ்ச் மற்றும் வெண் நிற புகையை கக்கியபடி, அக்னி -3 ஏவுகணை விண்ணில் சீறிப் பாய்ந்தது.

விண்ணில் செலுத்தப்பட்ட உடன் 350 கி.மீ., உயரத்துக்கு சென்ற ஏவுகணை அதன் பிறகு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி மிக வேகமாக பாய்ந்து சென்று அழித்தது. இதற்கு ஏவுகணை எடுத்துக் கொண்ட நேரம் 800 வினாடிகள். நாலாயிரம் டன் எடை கொண்ட ஒரு பொருள், மிக வேகமாக பாய்ந்து வந்து தாக்கினால், எந்த அளவுக்கு சேதம் ஏற்படுமோ, அந்த அளவுக்கு வேகமாக இந்த ஏவுகணை செயல்பட்டது. அக்னி -3 ஏவுகணை, மூன்றாயிரத்து 500 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் படைத்தது. எனவே, சீனாவின் மத்திய பகுதியில் உள்ள நகரத்தைக் கூட தாக்க முடியும். சீனா தனது தென் கடற்கரை பகுதியில், அணு சக்தி திறன் படைத்த நீர்மூழ்கிக் கப்பல் தளத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகளுக்கு இது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அக்னி -3 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தி காட்டப் பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு ராணுவ அமைச்சர் அந்தோணி பாராட்டு தெரிவித்துள்ளார். துவக்கத்தில் மூன்று முறை மட்டுமே அக்னி -3 ஏவுகணை சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், முதல் சோதனை தோல்வியில் முடிந்ததால், மேலும் பல சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த சோதனைகள் முடிந்த பிறகு, கடற்படையில் முறையாக, அக்னி -3 ஏவுகணை முறையாக சேர்க்கப்படும்.

No comments: