Monday, May 05, 2008
யாகூவை வாங்கும் திட்டம் : கைவிட்டது மைக்ரோசாப்ட
நியூயார்க்: யாகூ நிறுவனத்தை வாங்கும் திட்டத்தைக் கைவிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். இருதரப்பிலும் ஏற்றுக் கொள்ளத்தக்க விலை முடிவாகவில்லை என்பதால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது முயற்சியைக் கைவிட்டது.யாகூவை வாங்க 4,750 கோடி டாலர் கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்வந்தது. ஆனால், யாகூ நிறுவனம் 5,700 கோடி டாலர் கேட்டது. இதுதொடர்பாக, மைக்ரோ சாப்ட் தலைமை நிர்வாகி ஸ்டீவன் ஏ.பால்மெர் மற்றும் யாகூ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜெரி யாங் இடையே சியாட்டில் நகரில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, யாகூவை விலைக்கு வாங்கும் போட்டியில் இருந்து மைக்ரோசாப்ட் விலகிக் கொண்டது.
முயற்சியில் தோல்வி : கூகுள் சர்ச் இன்ஜினுக்கு சரியான போட்டியாக உள்ள யாகூவை வாங்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் தீவிரம் ஆர்வம் காட்டியது. முதலில் 4,460 கோடி டாலர் கொடுக்க தயார் என அறிவித்தது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையின் போது, தொகையை அதிகரித்தது. ஆனாலும், யாகூ நிறுவனம் எதிர்பார்த்த தொகையை, அது எட்டவில்லை என்பதால், முயற்சியில் தோல்வி கண்டது மைக்ரோசாப்ட்.யாகூ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜெரி யாங்கிற்கு, மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி பால்மர் எழுதியுள்ள கடிதத்தில், "மைக்ரோசாப்ட் நிறுவனம், ஐந்தாயிரம் கோடி டாலர் வரையிலும் தனது தொகையை உயர்த்தித் தர தயாராக இருந்தது.
இது நல்ல விலை என்றாலும், அதை ஏற்றுக் கொள்ள யாகூ முன்வரவில்லை. அதனால், மைக்ரோசாப்ட் பங்குதாரர்கள், தொழிலாளர்கள் மற்றும் இதர பலரின் நலனைக் கருத்தில் கொண்டு, யாகூ நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை நாங்கள் கைவிட்டு விட்டோம்' என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)


1 comment:
wow….i love it..im into it……..
and i love all you work…..such a beautifulllll art….
nice, good work, dhaksna!
Post a Comment