Tuesday, April 22, 2008

கமலுக்கு கருணாநிதி தந்த முத்தம்!



தசாவதாரத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலைப் பார்த்து மகிழ்ந்த முதல்வர் கருணாநிதி, நெகிழ்ச்சியுடன் கலைஞானி கமல்ஹாசனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துப் பாராட்டியுள்ளார்.

தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீடு வருகிற 25ம் தேதி பிரமாண்ட மான அளவில் நடைபெறவுள்ளது. ஜாக்கி சான் வந்து ஆடியோவை ரிலீஸ்ச செய்கிறார். அமிதாப்பச்சன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் திரண்டு வருகின்றனர். முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

தற்போது ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ்களைக் கொடுக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.

விழாவில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, நடிகர் விஜய் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். உடன், கமல்ஹாசன், ஆசின், மல்லிகா ஷெராவத் ஆகியோரும் பங்கேற்கின்றனர். ரஜினிகாந்த் திடீரென வந்து சர்ப்ரைஸ் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் டிவி இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், போர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் முதல்வர் கருணாநிதிக்காக பிரத்யேகமாக படத்தின் டிரெய்லரை போட்டுக் காட்டினார். அப்போது கமல்ஹாசனும் உடன் இருந்தார்.

அதில் கமல்ஹாசனின் நடிப்பையும், மேக்கப்பையும் பார்த்து வியந்து போய் விட்டாராம் முதல்வர். இதெல்லாம் உண்மையிலேயே நீங்கள்தான் செய்தததா, நம்பவே முடியவில்லையே, அற்புதமாக இருக்கிறது என்று கமலை பாராட்டியுள்ளார்.மேலும் கல்லை மட்டும் பார்த்தால் கடவுள் தெரியாதடா என்ற வாலியின் பாடலையும் முதல்வர் மிகவும் ரசித்துள்ளார்.

பாடலைப் பார்த்து முடித்ததும், கமல்ஹாசனை கட்டிப்பிடித்து முத்தமிட்டுப் பாராட்டினாராம்.

வழக்கமாக ஹீரோயின்களுக்கு முத்தமிட்டுத்தான் கமலுக்கு வழக்கம். ஆனால் அவருக்கே முத்தமிட்டு இன்ப அதிர்ச்சிக் கொடுத்து விட்டார் கலைஞர்.

1 comment:

Anonymous said...

Nice and very unique! Awesome!