மீரா ஜாஸ்மினை காதலித்து திருமணம் செய்கிறார் பரத். காமுகன் ஒருவனால் மீரா ஜாஸ்மின் இறக்க நேரிடுகிறது.
காமுகனை பழிவாங்கும் பரத் ஜெயிலுக்குப் போகிறார். திரும்பி வருகிறவர் நேபாளியாக மாறுவேடம் போட்டு சிட்டியில் உள்ள காமுகர்களை சிரிஞ்ச் வைத்தே கொல்கிறார். தமிழ் சினிமாவின் அஜெண்டாவுக்குள் அடங்கிப் போகும் இந்த நேர்கோட்டுக் கதையை மூன்றாக கூறுபோட்டிருக்கிறார் இயக்குனர் வி.இஸட். துரை. அதனால், ஏன் எதற்கு யார் எப்படி என நிறைய கேள்விகள்.
காரை ஓட்டிக் கொண்டே பரத் காரணத்தைச் சொல்லும்போது திரி பிடுங்கப்பட்ட தீபமாகிறது படம். பரத்துக்கு மூன்று கெட்டப்புகள். உள்ளேன் ஐயா நடிகர்களுக்கு மத்தியில் உயிரை கொடுத்து நடித்திருக்கிறார். அந்த நேபாளி இழுத்து இழுத்துப் பேசும்போது நமக்கு சுவாசம் சிக்கிக்கொள்கிறது.
மீரா ஜாஸ்மின் காதலிக்கிறார், கல்யாணம் செய்கிறார், காமுகனால் கற்பு பறிக்கப்படும் முன் தன்னைத்தானே சாகடித்துக் கொள்கிறார். (கதாநாயகி என்றால் உயிரைப் பறித்தாவது அவர்கள் கற்பை இயக்குனர்கள் காப்பாற்றும் மர்மம் தனியே ஆராயப்பட வேண்டிய ஒன்று).

No comments:
Post a Comment