கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழக விண்வெளி வாகன ஆய்வு மையத்தின் கேன்-எக்ஸ் 2 (ஏழு கிலோ), என்.எல்.எஸ்.,-5 (16 கிலோ), ஜப்பான் டோக்கியோ தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் கியூட்-1.7 (ஐந்து கிலோ), டென்மார்க் ஆல்பர்க் பல்கலைக் கழகத்தின் ஏ.ஏ.யு.எஸ்.ஏ.டி.,-2 (மூன்று கிலோ), ஜெர்மனி ஆச்சன் அறிவியல் பல்கலைக் கழகத்தின் காம்பஸ்-1 (மூன்று கிலோ), நெதர்லாந்து டெல்பி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் டெல்பி-சி3 (6.5 கிலோ), ஜப்பான் நிகோன் பல்கலைக் கழகத்தின் சீட்ஸ் (மூன்று கிலோ), ஜெர்மனி ஓ.எச்.பி., சிஸ்டம்ஸ் அமைப்பின் ரூபின்-8 (எட்டு கிலோ) ஆகிய எட்டு நானோ செயற்கைக் கோள்களும், "பி.எஸ்.எல்.வி.,-சி9' ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த எட்டு செயற்கைக்கோள்களின் மொத்த எடை 51.5 கிலோ.
பூமியிலிருந்து புறப்பட்ட 16 நிமிடங்களில் இந்த 10 செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்படும். இந்த 10 செயற்கைக் கோள்களின் மொத்த எடை 824.5 கிலோ. சென்ற ஆண்டு ஏப்ரலில் ரஷ்யா மொத்தம் 300 கிலோ எடை கொண்ட 16 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது. இதற்கு அடுத்தபடியாக, தற்போது இந்தியா 10 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.




