Thursday, May 08, 2008

ஐ.ஐ.டி. யில் தொலைதூரக் கல்வி


ஐ.ஐ.டி.க்குள் நுழைய முடியவில்லையா? மாணவர்கள் மனமுடைந்து விடவேண்டாம். தற்போது நீங்கள் தொலைதூரக் கல்வி வசதி மூலம் ஐ.ஐ.டி.யில் கலவி கற்கலாம்.

ஐ.ஐ.டி. உள்‌ளிட்ட முன்னணி தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் தற்போது தங்களது முதுகலைப் பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வி மூலம் விரைவில் வழங்கவுள்ளது.

இதற்காக அயல் நாட்டு பல்கலைக் கழகங்கள் தொலைதூரக் கல்வியை எவ்வாறு நடத்துகின்றன என்பதை ஐ.ஐ.டி. ஆராய்ந்து வருகிறது.

இதற்கான மாதிரியை மத்‌திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்துள்ளது.

இதற்காக 7 ஐ.ஐ.டி. கூட்டிணைகிறது. பாடத் திட்ட அடிப்படையிலான இணையதள வகுப்புகள் மற்றும் வீடியோ ஆகியவற்றை ஒரு பரிசோதனை முயற்சியாக உருவாக்கியுள்ளது. இதற்காக 140 பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது இணையதளம் மூலமாக வினியோகம் செய்யப்படுகிறது.

தொழில் நுட்பக் கல்வியில் டிப்ளமா தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் இந்த பாடத் திட்டங்களில் சேரலாம். மேலும் தொழில் நுட்ப இளங்கலை பல்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும் தங்களது முதுகலை படிப்பை இதன் மூலம் தொடரலாம் என்று மனித வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொலைதூரக் கல்வித் திட்டங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி வரும் தொலை தூரக் கல்விக் குழு (டி.இ.சி.) இந்த தொலைதூரக் கல்வித் திட்டத்தையும் கட்டுப்படுத்தும்.

அக்னி -3 ஏவுகணை சோதனை வெற்றி


சர்வதேச அரங்கில் இந்தியாவின் ராணுவ வல்லமையை வெளிப் படுத்தும் வகையில், அக்னி -3 ஏவுகணை சோ தனை, நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மூன்றாயிரத்து 500 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கையும் தாக்கவல்ல இந்த ஏவுகணை; அணுகுண்டை சுமந்து செல்லும் திறன் படைத்தது. அணுசக்தியில் இயங்கும் சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல் தளத்தால், ஏற் பட்ட அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அக்னி -3 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில், ஏவுகணை உற்பத்தியில், இந் தியா பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. அந்த வகையில், அக்னி -3 ஏவுகணை தயாரிப்பு முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்த ஏவுகணை, தரையில் இருந்து செலுத்தப்பட்டு, தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்க வல்லது. 16 மீட்டர் நீளமும், 1.8 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த ஏவுகணையின் மொத்த எடை 48 டன்.

அதிகபட்சம் 1.5 டன் எடை கொண்ட குண்டை சுமந்து செல்லும். இந்த ஏவுகணையில் நவீன கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அது ஏவுகணை செல்ல வேண்டிய வழித்தடத்தை கண்காணிக்கும் திறன் படைத்தது. இந்த ஏவுகணை இரண்டு அடுக்கு கொண்டது. உள் நாட்டு தொழில்நுட் பத்தில் உருவாக்கப் பட்டது. திட எரிபொருளில் இயங்க கூடியது. எனவே, இதை இந்தியாவின் எப்பகுதிக்கும் கொண்டு சென்று இயக்க முடியும். அக்னி -3 ஏவுகணை சோதனை, முதலில், 2006 ஜூலையில் நடந்து; அது தோல்வியில் முடிந்தது. அப் போது, ஏவுகணை செலுத்திய 65 வினாடிகளில், அது தன் கட்டுப்பாட்டை இழந்தது. இதன் பின், 2007 ஏப்ரல் 12ம் தேதி, அக்னி -3 ஏவுகணை சோதனை மீண்டும் நடத்தப் பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. ஏவுகணை செலுத்தப்பட்டு, இலக்கை தாக்கும் வரை 15 நிமிடங்களுக்கு, அதன் கட்டுப்பாடு விஞ்ஞானிகளிடம் இருந்தது. சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்றாவது முறையாக, அக்னி -3 ஏவுகணை சோதனை நேற்று மீண் டும் நடத்தப்பட்டது. ஒரிசா கடற்கரையில், பாலாசூரை ஒட்டியுள்ள வீலர் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. காலை 9.56 மணிக்கு, நடமாடும் லாஞ்சரில் இருந்து ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. ஆரஞ்ச் மற்றும் வெண் நிற புகையை கக்கியபடி, அக்னி -3 ஏவுகணை விண்ணில் சீறிப் பாய்ந்தது.

விண்ணில் செலுத்தப்பட்ட உடன் 350 கி.மீ., உயரத்துக்கு சென்ற ஏவுகணை அதன் பிறகு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி மிக வேகமாக பாய்ந்து சென்று அழித்தது. இதற்கு ஏவுகணை எடுத்துக் கொண்ட நேரம் 800 வினாடிகள். நாலாயிரம் டன் எடை கொண்ட ஒரு பொருள், மிக வேகமாக பாய்ந்து வந்து தாக்கினால், எந்த அளவுக்கு சேதம் ஏற்படுமோ, அந்த அளவுக்கு வேகமாக இந்த ஏவுகணை செயல்பட்டது. அக்னி -3 ஏவுகணை, மூன்றாயிரத்து 500 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் படைத்தது. எனவே, சீனாவின் மத்திய பகுதியில் உள்ள நகரத்தைக் கூட தாக்க முடியும். சீனா தனது தென் கடற்கரை பகுதியில், அணு சக்தி திறன் படைத்த நீர்மூழ்கிக் கப்பல் தளத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகளுக்கு இது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அக்னி -3 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தி காட்டப் பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு ராணுவ அமைச்சர் அந்தோணி பாராட்டு தெரிவித்துள்ளார். துவக்கத்தில் மூன்று முறை மட்டுமே அக்னி -3 ஏவுகணை சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், முதல் சோதனை தோல்வியில் முடிந்ததால், மேலும் பல சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த சோதனைகள் முடிந்த பிறகு, கடற்படையில் முறையாக, அக்னி -3 ஏவுகணை முறையாக சேர்க்கப்படும்.

Monday, May 05, 2008

உடற்பயிற்சிக்கு சில வழிகள்

எந்த வேலையும் உடற்பயிற்சி தான்!

"டாக்டர் சொல்லி விட்டார்; நான் எக்சர்சைஸ் பண்ணப்போறேன்' என்று, வாக்கிங் உடைகள், தொப்பி, பூட்ஸ் எல்லாம் வாங்குவர். அதிகாலையில் நடந்து விட்டு, கடைசியில் நொறுக்குத்தீனி, ஜூஸ் என்று எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு வீடு திரும்புவர். இதனால் ஒரு பயனும் இல்லை; அவர்கள் எதிர்பார்க்கும் கலோரி குறையாது. ரத்த அழுத்தமும் குறையாது. நடப்பதில் குறையும் கலோரி, யோகா செய்வதிலும் குறையும்; வீட்டு வேலைகளை செய்வதிலும் குறையும். ஆபீஸ் வேலை செய்யும் போதே உடற்பயிற்சி செய்யலாம். வீடு,ஆபீசில், வெளியிடங்களில், எப்படி உடற்பயிற்சி செய்து கலோரியை குறைக்கலாம்?

இதோ சில வழிகள்:

* ஆபீசில் இருந்து பஸ்சில் திரும்பி வரும் போது, ஒரு ஸ்டாப் முன்னதாகவே இறங்கி வீட்டுக்கு நடந்து போங்கள்.

* அடுத்த தெருவுக்கு போவதற்கு கூட பைக்கை எடுக்காதீர்கள்; நடந்து போகலாமே.

* மாடிப்படி ஏறுவதற்கு லிப்டை பயன்படுத்தாதீர்கள்.

* மதிய உணவு சாப்பிட்டபின் சக ஊழியர்களுடன் நடந்து செல்லுங்கள்.

* தளர்ந்த உடைகளை பயன்படுத்துங்கள்; காற்று வாங்க வசதியாக இருக்கும்.

* பைலை ஆபீஸ் பையனிடம் தருவதற்கு பதில் நீங்களே கொண்டு போங்கள்.

* அரை மணிக்கு ஒரு முறை கம்ப்யூட்டரில் இருந்து கண்களை எடுத்து விட்டு சற்று எழுந்து நிற்கலாம்; நடக்கலாம்.

* கண்களை ஒரு நிமிடம் மூடி, யோகா பயிற்சியில் செய்வது போல மேல்கீழாக, வலது இடமாக, சுழற்றவும். தோள்களை, காதில் இடிக்கும் படி உயர்த்தி தளர்த்தவும்.

* இருக்கையில் இறுக்கமாக உட்காராமல் சாதாரணமாக உட்கார்ந்து வேலை செய்யுங்கள்.

* இருக்கையில் உட்கார்ந்த நிலையில், வலதுகையை நீட்டுங்கள்; இடது கையை நீட்டி, வலது உள்ளங்கையுடன் சேருங்கள்; நீட்டி பின், மணிக்கட்டை மேலும் கீழுமாக அசையுங்கள். கடிகார முள் போல சுழற்றவும்; "ஆன்டி கிளாக்' காகவும் சுழற்றவும்.

* கம்ப்யூட்டரில் வேலை பார்த்தால், மணிக்கு ஒரு முறை எழுந்து நில்லுங்கள்; ஒரு நிமிடம், அமைதியாக மூச்சு பயிற்சி செய்யுங்கள்.

* ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடியுங்கள்; அதிக காபி, டீயை தவிருங்கள்.

* தலைவலி வந்தால், உடனே சில நிமிடம் வெளியில் காலாற நடந்து சென்று வாருங்கள்.

* அடிக்கடி மாத்திரை போடுவதை தவிருங்கள்; அமைதியாக வேலை செய்ய பழகுங்கள்.

* வேலையில் டென்ஷன், பதட்டம் கூடவே கூடாது. மனதில் வேலை செய்யும் எண்ணம் மட்டும் இருக்க வேண்டும்.

24 மணி நேர சட்ட உதவி மையம

உதவிக்கு வரலாமா? : "சட்டம் ஓர் இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் என்பது விளக்கு' என்று சொல்வார்கள். சட்டத்தின் முழுமையான பயன் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் www.helplinelaw.com என்ற வெப்சைட் உள்ளது. இந்த வெப்சைட்டில் 24 மணி நேர சட்ட உதவி மையம் செயல்படுகிறது. குடும்ப கோர்ட்டுகளுக்கு இந்த வெப்சைட்டில் முதலிடம் தரப்பட்டுள்ளது.

யாகூவை வாங்கும் திட்டம் : கைவிட்டது மைக்ரோசாப்ட


நியூயார்க்: யாகூ நிறுவனத்தை வாங்கும் திட்டத்தைக் கைவிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். இருதரப்பிலும் ஏற்றுக் கொள்ளத்தக்க விலை முடிவாகவில்லை என்பதால், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது முயற்சியைக் கைவிட்டது.யாகூவை வாங்க 4,750 கோடி டாலர் கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்வந்தது. ஆனால், யாகூ நிறுவனம் 5,700 கோடி டாலர் கேட்டது. இதுதொடர்பாக, மைக்ரோ சாப்ட் தலைமை நிர்வாகி ஸ்டீவன் ஏ.பால்மெர் மற்றும் யாகூ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜெரி யாங் இடையே சியாட்டில் நகரில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, யாகூவை விலைக்கு வாங்கும் போட்டியில் இருந்து மைக்ரோசாப்ட் விலகிக் கொண்டது.

முயற்சியில் தோல்வி : கூகுள் சர்ச் இன்ஜினுக்கு சரியான போட்டியாக உள்ள யாகூவை வாங்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் தீவிரம் ஆர்வம் காட்டியது. முதலில் 4,460 கோடி டாலர் கொடுக்க தயார் என அறிவித்தது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையின் போது, தொகையை அதிகரித்தது. ஆனாலும், யாகூ நிறுவனம் எதிர்பார்த்த தொகையை, அது எட்டவில்லை என்பதால், முயற்சியில் தோல்வி கண்டது மைக்ரோசாப்ட்.யாகூ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜெரி யாங்கிற்கு, மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி பால்மர் எழுதியுள்ள கடிதத்தில், "மைக்ரோசாப்ட் நிறுவனம், ஐந்தாயிரம் கோடி டாலர் வரையிலும் தனது தொகையை உயர்த்தித் தர தயாராக இருந்தது.


இது நல்ல விலை என்றாலும், அதை ஏற்றுக் கொள்ள யாகூ முன்வரவில்லை. அதனால், மைக்ரோசாப்ட் பங்குதாரர்கள், தொழிலாளர்கள் மற்றும் இதர பலரின் நலனைக் கருத்தில் கொண்டு, யாகூ நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை நாங்கள் கைவிட்டு விட்டோம்' என தெரிவித்துள்ளார்.

Friday, May 02, 2008

சிற‌ந்த த‌மி‌ழ் மெ‌ன்பொரு‌ள் உருவா‌க்குபவ‌ர்களு‌க்கு ரூ.1 ல‌ட்ச‌ம் ப‌ரிசு!

''த‌மி‌ழி‌ல் ‌சிற‌ந்த மெ‌ன்பொருளை உருவா‌க்குபவ‌ர்களு‌க்கு ரூ.1 ல‌ட்ச‌ம் ப‌ரிசாக வழ‌‌ங்க‌ப்படு‌ம்'' எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ந்த ப‌ரிசை பெறுவத‌ற்கு, த‌மி‌‌ழ் வள‌ர்‌ச்‌சியை கரு‌த்‌தி‌ல் கொ‌‌ண்டு உருவா‌க்க‌ப்‌பட்ட மெ‌ன்பொருளாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் மெ‌ன் பொரு‌‌ள் த‌னி ஒருவராலோ, கூ‌ட்டு முய‌ற்‌சியாலோ அ‌ல்லது ‌‌நிறுவன‌த்தாலோ உருவா‌க்க‌ப்ப‌ட்டு இரு‌க்கலா‌ம் எ‌ன்று‌ம் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த போ‌ட்டி‌யி‌ல் ப‌ங்கே‌ற்பத‌ற்காக ஒ‌வ்வாருவரு‌ம் த‌ங்களை ப‌திவு செ‌ய்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், ப‌திவு‌‌க் க‌ட்டணமாக ரூ.100 பணமாகவோ, வரைவோலையாகவோ த‌மி‌ழ் வள‌ர்‌ச்‌சி‌த்துறை இயக்குன‌ர் எ‌ன்ற பெய‌ரி‌ல் செலு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று‌‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌மேலு‌ம், வி‌ண்ண‌ப்ப‌ங்களை "த‌மி‌ழ் வள‌ர்‌ச்‌சி‌த் துறை இய‌க்கு‌‌ன‌ர், த‌மி‌‌ழ் வள‌ர்‌ச்‌சி வளாக‌ம் முத‌ல் தள‌ம், ஆ‌ல்சு சாலை, எழு‌ம்பூ‌ர் செ‌ன்னை-8" எ‌ன்ற முகவ‌ரி‌யி‌ல் பெறலா‌ம் எ‌ன்று‌ம் பூ‌ர்‌த்‌தி செ‌ய்யய‌ப்ப‌ட்ட ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் மா‌ர்‌ச் 5‌ம் தே‌தி‌க்கு‌ள் வ‌ந்து சேர வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஒ‌வ்வொரு ஆ‌‌ண்டு‌ம் சிற‌ந்த த‌மி‌ழ் மெ‌ன்பொருளை உருவா‌க்‌கியவ‌ரை தே‌ர்வு செ‌ய்து, க‌ணி‌ய‌ன் பூ‌ங்குன்றனா‌ர் பெய‌ரி‌ல் ரூ.1 ல‌ட்ச‌ம் ப‌ரிசு வழ‌ங்க‌ப்படு‌வதாக த‌மி‌‌ழ் வள‌ர்‌ச்‌சி‌த்துறை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

உலகின் மிகப்பெரிய கடற்பாலம் திறப்பு!


சீனாவில் இரு நகர‌ங்களு‌க்கு இடையேயான உல‌கி‌ன் ‌மிக ‌நீளமான கட‌ற்பால‌ம் ‌திற‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

WD36 ‌கி.‌மீ. தூர‌ம் உ‌ள்ள இ‌ந்த ஹேங்ஸூ வளைக்குடாப்பாலம், ஷாங்காயிலிருந்து தொழிற்சாலை நகரமான நிங்போவை கடல் வழியாக இணைக்கிறது. உலகிலேயே மிக நீளமான கடற்பாலம் இதுவே என்று சீன அரசு தெரிவித்துள்ளது.

இ‌ந்த இரு நகர‌ங்களு‌க்கு‌ம் இடையே 150 கி.மீ க்கும் மேல் இருந்த சாலை வ‌ழி தூர‌ம் தற்போது இந்த கடற்பாலத்தால் வெறும் 36 கி.மீ. ஆக குறைந்துள்ளது.

இந்த பாலக் கட்டுமானத்தில் தனியார் முதலீட்டாளர்களின் முதலீடுகளும் சேர்ந்துள்ளது. சீன உள்கட்டமைப்பு திட்டத்தில் முதன் முதலாக தனியார் முதலீடுகள் வரவேற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


6 வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் வாகனங்கள் சுமார் 100 கி.மீ வேகம் வரை செல்லலாம். 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கடற்பாலக் கட்டுமானம் 2003ம் ஆண்டு நவம்பரில் துவங்கியது.

சீனாவில் இதற்கு முன்பு ஷாங்காயிலிருந்து யாங்ஷான் துறைமுகத்தை இணைக்கும் 32.5 கி.மீ. கடற்பாலம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.