Monday, February 25, 2008

அன்னை

எனது ஜனனத்திற்காக
பல முறை மரணவாயிலை எட்டிப்பார்த்தவள் - நீ

உன் விரல்களை பற்றிக் கொண்டு
தான் நடை பழகினேன்
இன்று உனக்கு முன்பாகச்செல்வதைக் கண்டும்சந்தோசப்படுகிறாய்!

உன் அசைவுகளைக் கண்டுபேசத் துவங்கியவன்!!
இன்று உன்னை விடவும்பேசுவதைக் கண்டும்சந்தோசப்படுகிறாய்!

உன் விரல்களைக் கொண்டுஎழுதப் பழகியவன்
இன்று உன்னை விடவும்எழுதுவதைக் கண்டும் சந்தோசப்படுகிறாய்!

எத்தனைஇரவுகள் உன் தூக்கம் தொலைத்திருப்பாய்...!
வலிகளை மட்டும்கற்றுத் தந்தவன்நான்....

என் வலிகண்டதும்.... - நீஏன்துடிதுடித்துப் போகிறாய்?தாய் என்பதாலா...?

No comments: